

டெல்லி,
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பத்மாவத் படக்காட்சியைக் குறிப்பிட்டு கோழைத்தனமாக உயிரை நீக்கியிருக்க கூடாது என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் பேசினார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், சாகித் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் 2018-ம் ஆண்டில் வெளியான படம், 'பத்மாவத்'. இந்த படத்தின் இறுதியில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே மகளிர் படையுடன் எரியும் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி பெரியளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பத்மாவத் படக்காட்சியைக் குறிப்பிட்டு கோழைத்தனமாக உயிரை நீக்கியிருக்க கூடாது என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. இந்து மத அரச பெண்களை எப்படி கோழை எனலாம் என்று கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து ஸ்வரா பாஸ்கர் அளித்துள்ள விளக்கத்தில், "ராணி பத்மாவதியையோ, அரண்மனை பெண்களையோ கோழைகள் என்று நான் கூறவில்லை. என்னதான் இருந்தாலும் உயிர் முக்கியம் இல்லையா? முடிந்து போன விஷயங்களுக்கு உயிர் கொடுப்பது போல இருக்கிறதே... என்று தான் அந்த கருத்தை உதிர்த்தேன். பெண்களின் வீரத்தை அறிவேன். அதேவேளை எனது மனக்குமுறல்களை தான் சொன்னேன். யாரையும் தவறாக குறிப்பிடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.