நான் விஜய்யின் தவெக கட்சியில் இணையவில்லை - நடிகர் ராமராஜன்

எனது உறவினர் தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்காக பிரச்சாரம் செய்வதாக ராமராஜன் கூறியுள்ளார்.
நான் விஜய்யின் தவெக கட்சியில் இணையவில்லை -  நடிகர் ராமராஜன்
Published on

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், நடிகர் விஜய் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராமராஜன் விஜய் கட்சி வேட்பாளர் விபின் சக்​கர​வர்த்​தியை ஆதரித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவது வைரல் ஆகி வருகிறது. அதிமுகவில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துவிட்டாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் ராமராஜன் “இந்த தேர்​தல் வித்​தி​யாச​மான தேர்​தல். இது​வரை பார்க்​காத தேர்​தல். நல்​ல​வர்​களுக்கு வாக்கு செலுத்தி அடுத்த 5 ஆண்​டு​களை பொற்​கால​மாக மாற்ற வேண்​டும். நான் தவறானவர்​களுக்கு ஆதரவு அளிக்க மாட்​டேன். ஆலங்​குளம் தொகுதி தவெக வேட்​பாளர் எனது நீண்ட கால குடும்ப நண்​பரின் மகன். அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டு, நட்​புக்​காக அவருக்கு பிரச்​சா​ரம் செய்ய வந்​துள்​ளேன்.

நீண்ட இடைவெளிக்கு பின்​னர் நான் நடித்து வெளி​யான சாமானியன் திரைப்​படத்தை தமிழகம் முழு​வதும் வெளி​யிட யாரும் முன்​வ​ராத நிலை​யில் ஆலங்​குளத்​தில் டிபிவி குடும்​பத்​தினர் அவர்​களது தியேட்​டரில் 130 நாட்​கள் ஓட வைத்து வெற்​றிப்படமாக ஆக்​கி​னார்​கள். அந்த குடும்​பத்​தினர் முன்பு கேட்ட கோரிக்​கையை நிறைவேற்​று​வதற்​காகவே அவர்​களின் வாரி​சான விபின் சக்​கர​வர்த்​திக்கு ஆதரவு கேட்டு வந்​துள்​ளேன். அவர் எந்த கட்​சி​யைச் சேர்ந்​தவர் என்​பது எனக்கு முக்​கியமில்​லை. குடும்ப நெருக்​க​மும், விசு​வாச​மும் தான் முக்​கி​யம். என் நண்​பருக்​காகவே நான் ஓட்டு கேட்க வந்​துள்​ளேன். எம்​ஜிஆர் மீது கொண்ட மரி​யாதை என் உயிர் இருக்​கும் வரை மாறாது” என்று பேசி​யுள்ளார். அதி​முகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் தவெக வேட்​பாள​ருக்கு ஓட்டு கேட்டு பிரச்​சா​ரம் செய்​தது ஆலங்​குளம் தொகு​தி​யில்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com