பீப்பிள்ஸ் ஸ்டார் பட்டம் ...விமர்சனத்திற்குள்ளான பிரபல நடிகர்


I didn’t know ‘People’s Star’ was R Narayana Murthy sir’s title – Sundeep Kishan
x

பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் நாராயண மூர்த்திக்கு பீப்பிள்ஸ் ஸ்டார் என்ற பட்டம் இருந்து வருகிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படக்குழுவினர் சந்தீப் கிஷனுக்கு பீப்பிள்ஸ் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்திருக்கின்றனர். இது பல்வேறு விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. ஏனென்றால், பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் நாராயண மூர்த்திக்கு பீப்பிள்ஸ் ஸ்டார் என்ற பட்டம் இருந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தீப் கிஷன் பேசுகையில், " பீப்பிள்ஸ் ஸ்டார் பட்டம் ஆர் நாராயண மூர்த்தி சாருடையது என்பது எனக்கு தெரியாது. அவர் மக்கள் பிரச்சினைகளில் எவ்வளவு நாட்டம் கொண்டவர், எல்லோருடனும் எப்படிப் பழகுகிறார் என்பது எனக்குத் தெரியும்.' என்றார்.

1 More update

Next Story