படத்திற்கு வீண் விளம்பரங்கள் தேடுவது எனக்கு பிடிக்காது - இயக்குனர் அட்லீ

அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
படத்திற்கு வீண் விளம்பரங்கள் தேடுவது எனக்கு பிடிக்காது - இயக்குனர் அட்லீ
Published on

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழில் தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இவரது இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான்' படம் ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்தது.

அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அட்லீ கூறும்போது, "ஒரு படத்தை தொடங்கும் முன்பாகவே ஆஹோ... ஓஹோ... என்று புகழ்பாட, பிரமிக்க வைக்க விரும்பவில்லை. அப்படி வீண் விளம்பரம் தேடுவதும் எனக்கு பிடிக்காது. என் படத்தில் உற்சாகம் இருக்கும். அது ரசிகர்களுக்கு தெரியும். ரசிகர்கள் எண்ண ஓட்டம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ப படங்கள் எடுப்பது சவாலானது கூட. அந்த சவால் எனக்கு பிடிக்கும். அதைத்தான் மேற்கொண்டு வருகிறேன்”, என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com