தேசிய விருது எனக்கு தேவையில்லை - ராஷ்மிகா மந்தனா


தேசிய விருது எனக்கு தேவையில்லை - ராஷ்மிகா மந்தனா
x
தினத்தந்தி 15 Nov 2025 5:53 PM IST (Updated: 15 Nov 2025 5:57 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ராஷ்மிகா மந்தனா ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் சிறப்பான நடிப்பிற்காக தனக்கு தேசிய விருது தேவைப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

பெண்களை மையமாக வைத்து உருவாகிய ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனு எம்மானுவேல், தீக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதற்காக இவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டுமென தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உள்பட பலரும் பேசி வருகிறார்கள்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ராஷ்மிகா “நீங்கள் அனைவருமே புரிந்துகொண்டீர்கள். எங்களுடைய நோக்கம் என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நீங்கள் படத்துடன் ஒன்றிவிட்டீர்கள். அதுவே எனக்குப் பெரிய விருதுதான். தேசிய விருது உள்பட எந்த விருதுவுமே எனக்குத் தெரியாது. இனிமேல் அவை தேவையில்லை. நீங்கள் அனைவரும் படத்தினைப் பார்த்து உணர்கிறீர்கள் இல்லையா? அதுபோதும். எனக்கு அதுவே பிடித்துவிட்டது. இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. அனைவருக்கும் மிக்க நன்றி” என கூறினார்.

1 More update

Next Story