அதிக படங்கள் வேண்டாம்; தடம் பதிக்கும் கதாபாத்திரங்கள் போதும் - சம்யுக்தா மேனன்

நடிகை சம்யுக்தா மேனன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
அதிக படங்கள் வேண்டாம்; தடம் பதிக்கும் கதாபாத்திரங்கள் போதும் - சம்யுக்தா மேனன்
Published on

சம்யுக்தா மேனன் தென்னிந்திய திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திறமையான நடிகை. இவர், முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இளம் வயதிலேயே பல மொழிகளில் நடித்து வருகிற சம்யுக்தா மேனன், திறமை மற்றும் அர்ப்பணிப்பால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. அவர், “இளம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பதுதான் என் இலக்கு. அதை மனதில் கொண்டுதான் படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இந்த மனநிலை தான் அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. நடிக்கும் படங்கள் அத்தனையிலும் என் தடத்தை பதிக்கவேண்டும் என்பதில் தான் என் நோக்கம் இருக்கிறது. விரைவில் தமிழ் படங்களில் தோன்றுவேன்” என்று குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com