என் மனதில் புத்துணர்ச்சியை உணர மது அருந்துகிறேன்- நடிகை வர்ஷா

நடிகை வர்ஷா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டார்.
என் மனதில் புத்துணர்ச்சியை உணர மது அருந்துகிறேன்- நடிகை வர்ஷா
Published on

தெலுங்கு திரை உலகில் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான வர்ஷா சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் கிசிக் டாக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது மதுப்பழக்கம் பற்றி வெளிப்படையாக பேசுகையில், "நான் எப்போதும் மது அருந்துகிறேன். என் மனதில் புத்துணர்ச்சியை உணர மட்டுமே நான் குடிக்கிறேன். நண்பர்களுடன் விருந்துக்கு சென்றால் எனக்கு 2 பெக் ரெட் ஒயின் வேண்டும். இதைப் பற்றி பொய் சொல்ல எனக்கு பிடிக்காது. ஆனால் குடிப்பது ஒரு பழக்கமாக மாறக் கூடாது.

மது அருந்திய உடன் நினைவுக்கு வருவது அந்த இயக்குனர் என்னை வெறுப்புடன் பார்த்தார். அதனால் நான் விருந்துகளுக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்." என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com