படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்தேன் - சமந்தா

படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததாக சமந்தா கூறினார்
படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்தேன் - சமந்தா
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

அதன்பிறகு மயோசிடிஸ் நோய் பாதிப்பில் சிக்கியதால் ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தற்போது, புதிய இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததாக சமந்தா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் நான் "சிட்டாடல்" வெப் தொடர் மற்றும் "குஷி" படத்தில் பிஸியாக நடித்தேன். குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதால் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி ஆனேன். என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com