"கிளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன்"- இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் ராம் இயக்கிய 'பறந்து போ' படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
"கிளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன்"- இயக்குனர் வெற்றிமாறன்
Published on

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்ற இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியதாவது, எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டு வந்து பேசுகிறீர்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. கிளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன். அதனால் எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருப்பினும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ராம் தொடர்ந்து படங்கள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார். இவர் ஒரு நல்ல கதை ஆசிரியர். ராம், மிர்ச்சி சிவாவை வைத்து படம் எடுக்கிறார் என்பது ஆச்சரியம் இல்லை.  ஒரு நகைச்சுவை படமாகக் கண்டிப்பாக இருக்கும். ராமின் இந்தப் படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று பேசியிருக்கிறார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com