"லெவன்" படத்தின் கதையை முதலில் அவருக்குதான் எழுதினேன் - லோகேஷ் அஜில்ஸ்


லெவன் படத்தின் கதையை முதலில் அவருக்குதான் எழுதினேன் - லோகேஷ் அஜில்ஸ்
x
தினத்தந்தி 5 July 2025 2:36 PM IST (Updated: 6 Sept 2025 1:42 AM IST)
t-max-icont-min-icon

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கிய லெவன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சென்னை,

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'லெவன்'. இந்தபடத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி நாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்திருந்தார். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "லெவன் படத்தின் கதையை சிம்புவுக்காக எழுதினேன். பெஞ்சமின் கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்" என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story