’நானி நடிப்பைப் பார்த்து புல்லரித்து போனது’ - ’தசரா’ பட நடிகர்

நானியின் 'தி பாரடைஸ்' படத்தின் செட்டை சமீபத்தில் பார்வையிட்டதாக அவர் கூறினார்.
I got goosebumps watching Nani sir on the sets of The Paradise-Deekshith Shetty
Published on

சென்னை,

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தசரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீக்சித் ஷெட்டி, 'தி பாரடைஸ்' படத்தின் செட்டை சமீபத்தில் பார்வையிட்டதாக கூறினார்.

அவர் கூறுகையில், "தெலுங்கு சினிமாவுக்கு 'தி பாரடைஸ்' ஒரு திருப்புமுனையாக இருக்கும், நானி சார் நடிப்பைப் பார்த்து எனக்கு புல்லரித்து போனது" என்றார். ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கும் 'தி பாரடைஸ்' படத்தில் மோகன் பாபு மற்றும் ராகவ் ஜுயல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதற்கிடையில், தீக்சித் ஷெட்டி நடித்த தி கேர்ள்பிரண்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் அவர் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com