'எனக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்தது' - மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி பதிவு

மடோனா செபாஸ்டியன் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
'I got my birthday gift' - Madonnasebastian
Published on

சென்னை,

'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அந்த படத்தில் அவரது செலின் கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது.

'காதலும் கடந்து போகும்', 'கவண்', 'ப பாண்டி', 'ஜூங்கா', 'வானம் கொட்டட்டும்', 'கொம்பு வச்ச சிங்கம்டா' போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக அவர் நடித்தது அவரை இன்னும் பிரபலமாகியது.

தற்போது இவர் சக்தி சிதம்பரம் இயக்கும்  'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடிக்கிறார். இந்நிலையில், நேற்று மடோனா செபாஸ்டியன் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பாடகி சித்ராவை மடோனா சந்தித்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்தது. நன்றி கடவுளே' என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com