''பிருத்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன்...' - ஜோஜு ஜார்ஜ்


‘I got removed from the Prithviraj film...’: Joju George
x

ஜோஜு ஜார்ஜ், தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்தார்.

சென்னை,

2018-ம் ஆண்டுக்குப் பின், தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது எல்லாம் மாயாஜாலம் என்று ஜோஜு ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

''தக் லைப்'' படத்தின் புரமோசனின்போது பேசிய ஜோஜு ஜார்ஜ், தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

''ஆரம்ப காலங்களில் நான் சிறுசிறு வேடங்களில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது பிருத்விராஜ் நாயகனாக நடித்த ஒரு படத்திலும் நடிக்க அழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஒரு காட்சியில் எனக்கு சரியாக நடிக்க வரவில்லை.

அதனால் பல டேக் சென்றது. இதையடுத்து என்னை அதில் இருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். அது என் வாழ்வில் மறக்க முடியாத காயம். ஆனால், அதன்பின் என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்திக்கொண்டேன்.

2018-ம் ஆண்டுக்குப் பின், என்னுடைய வாழ்க்கையில் நடந்தது எல்லாம் மாயாஜால பயணம் போன்றதுதான்'' என்றார்.

1 More update

Next Story