எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது - நடிகை ஜெனிலியா

நடகை ஜெனிலியா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது - நடிகை ஜெனிலியா
Published on

தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் இந்தி நடிகரும் முன்னாள் முதல் மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு படங்களில் அதிகம் நடிக்கவில்லை.

ஜெனிலியா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் மூன்று வாரங்களுக்கு முன்பு பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கடந்த 21 நாட்களாக என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று கடவுள் அருளால் இப்போது நோயில் இருந்து மீண்டுள்ளேன்.

கொரோனாவுக்கு எதிரான எனது போராட்டம் எளிமையாக இருந்தாலும் 21 நாட்களும் தனிமைப்படுத்தி கொண்டது சவாலாக இருந்தது. எனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. அன்புக்குரியவர்களிடம் இருங்கள், பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருப்பதன் மூலம்தான் இந்த பேயை எதிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com