இயக்குனர் ஆவதற்கு 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்- நடிகை பார்வதி திருவோத்து

படத்திற்கான கதை எழுதும் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக நடிகை பார்வதி திருவோத்து கூறியுள்ளார்.
இயக்குனர் ஆவதற்கு 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்- நடிகை பார்வதி திருவோத்து
Published on

நடிகை பார்வதி திருவோத்து தன் முதல் திரைப்படத்தை இயக்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து. தனது 17 வருட சினிமா வாழ்வில் தமிழில், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சமூகபிரச்சினைகள் என அனைத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இறுதியாக, ‘ஐ நோபடி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

5 ஆண்டுகளாக காத்திருப்பு...

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை பார்வதி திருவோத்து, “நான் புதிய படத்தை இயக்குவதற்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் கிடைப்பார் என ஆவலுடன் இருக்கிறேன். படத்திற்கான கதை எழுதும் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இன்னும் சில பணிகள் உள்ளன. விரைவில் படப்பிடிப்பை தொடங்குவேன் என நம்புகிறேன். எனக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். சினிமாவைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. சினிமா சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே எனக்கு தெரியும். ஒரு நடிகையாக எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு வரம்புகள் உள்ளது. இயக்கத்தின் மூலம் என் கற்பனை திறனை அதற்கு அப்பாலும் வெளிகொண்டு வர முடியும்.திரைக்கதை கிடைத்ததும் அதை படித்து அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் எப்படி சித்தரிப்பது என்று சிந்திக்க தொடங்கினேன். நான் திரைக்கதைகளை படிக்கும் விதமே மாறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com