சமூக வலைதளங்களில் 30 லட்சம் பேரை 'பிளாக்' செய்துள்ளேன்- பிரபல தெலுங்கு நடிகை

யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் அவர்களை உடனடியாக சமூக வலை தளங்களில் பிளாக் செய்து விடுவேன் என நடிகை அனுசுயா பரத்வாஜ் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளனியாக தனது கெரியரை துவங்கியவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் 'புஷ்பா' மற்றும் 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியா நடித்து வருகிறார்.
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் அழகில் பிரபல கதாநாயகிகளுடன் போட்டி போட்டு வருகிறார். இந்நிலையில் தனக்கு வரும் டிரோல்கள் குறித்து அனுசுயா கூறியதாவது:-
யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் அவர்களை உடனடியாக சமூக வலை தளங்களில் பிளாக் செய்து விடுவேன். என்னை பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்ட சுமார் 30 லட்சம் பேரை நான் 'பிளாக்' செய்து விட்டேன். இது மட்டுமின்றி பலருக்கு கடுமையான பதிலடி கொடுத்து உள்ளேன். இனியும் என்னால் தாங்க முடியவில்லை. என் வாழ்க்கையில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் பலரை பிளாக் செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.






