தாயான பின் நான் மாறிவிட்டேன் - நடிகை காஜல் அகர்வால்

தாயான பின் நான் மாறிவிட்டேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தாயான பின் நான் மாறிவிட்டேன் - நடிகை காஜல் அகர்வால்
Published on

காஜல் அகர்வால் திருமணம் செய்து குழந்தை பெற்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனாலும் கணவர், குழந்தையை கவனித்துக் கொள்ளும் குடும்ப பொறுப்பில் இருந்து நழுவவில்லை. தற்போது மகன் நீல் கிச்சலுவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தனது நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில், 'குழந்தை பிறந்து 6 மாதங்கள் எப்படி வேகமாக போனது என்று தெரியவில்லை. தாயானது என் வாழ்க்கையில் முக்கிய மாற்றம். பயந்து வாழ்ந்த இளம்பெண்ணாக இருந்து, இப்போது அம்மாவாக மாறி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனது வேலைகள் நடுவிலும் ஒரு அம்மாவாக சரியாக நடந்து கொள்வது எனக்கு சவாலாகவே இருக்கிறது.

குழந்தைக்கு தேவையான அனைத்தையும் இந்த அளவு மகிழ்ச்சியாக செய்வேன் என்று நினைக்கவில்லை. குழந்தை புரண்டு படுப்பது, நகருவது எல்லாம் ஒரு இரவில் நடந்ததைப்போல இருக்கிறது. முதல் ஜலதோஷம், நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க தொடங்கியது எல்லாம் விரைவாக நடந்துவிட்டது. நீ எங்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். உன் அம்மாவாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com