எதிர்மறை விமர்சனங்களை புறம் தள்ள கற்றுக்கொண்டேன் - நடிகை நிவேதா தாமஸ்

எதிர்மறை விமர்சனங்கள் தன்னை பாதிக்காது என்று சொல்லும் நிவேதா தாமஸ், தொடர்ந்து தனது பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறார்.
எதிர்மறை விமர்சனங்களை புறம் தள்ள கற்றுக்கொண்டேன் -  நடிகை நிவேதா தாமஸ்
Published on

'குருவி', 'ஜில்லா', 'தர்பார்', 'பாபநாசம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வர் நிவேதா தாமஸ். 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் சில உடல்நல பிரச்சினைகளால் எடை கூடிப்போன நிவேதா தாமஸ், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறார். உருவக்கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். நிவேதா தாமஸ் பற்றி விமர்சனங்கள் அதிகரித்து வந்தன.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிவேதா தாமஸ், “எப்போதுமே பிரபலங்களுக்கு விமர்சனம் வருவது சகஜம்தான். என் விஷயத்தில் அது அதிகமாகவே வந்துவிட்டது. ஆனாலும் விமர்சனங்களை புறம் தள்ள தற்போது கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் அது கடினமாக இருந்தாலும் போகப்போக அது பழகி விட்டது. என்னை பொருத்தவரை நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். மனம் புண்படும்படியான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது” என்று குறிப்பிட்டார்.

நிவேதா தாமஸின் கருத்துக்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com