

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையும், அசுர வேக ஆட்டக்காரருமான ஸ்ரீலீலா, 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு இணையாக ஆட எந்த நடிகரும், நடிகையும் கிடையாது என ஸ்ரீலீலா தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது.
இதனை ஸ்ரீலீலா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'அகந்தை எப்போதுமே என்னிடம் கிடையாது. நான் அப்படி வளரவும் இல்லை. எல்லோரையும் மதிப்பவள் நான். எனவே இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என்னை பற்றி புரியும்' என்றார்.