திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை - நடிகை சதா


திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை - நடிகை சதா
x

41 வயதாகும் நடிகை சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சதா. அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்தார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்தார். 'உன்னாலே உன்னாலே' படத்துக்கு பிறகு, அவர் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். பின்னர் 'டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது முழுவதுமாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்ட சதா, புகைப்பட கலைஞராக மாறிவிட்டார். காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார். 41 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதுபற்றி கேட்டால், "திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை. புகைப்பட துறையில் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு பார்க்கலாம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். எதற்கு அவசரம்?" என்று கேட்கிறார்.

வெளிநாடுகள் சென்று அங்குள்ள அடர்ந்த வன பகுதிகளில் குழுவினருடன் சென்று புகைப்படம் எடுத்து வரும் சதா, தேடி வரும் சினிமா வாய்ப்புகளையும் நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. 'ஏன் இப்படி ஆகிவிட்டார்?' என்று அனைவருமே சதாவை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

1 More update

Next Story