"அவதார் 4ம் பாகத்தை இயக்கும் எண்ணம் இல்லை" - ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது
"I have no intention of directing Avatar 4" - Director James Cameron
Published on

சென்னை,

அவதார் படத்தின் 3ம் பாகம் இம்மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதை விளம்பரப்படுத்தும் விதமாக பாரிஸில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், படத்தின் கதாநாயகன், கதாநாயகி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், 4வது பாகத்தை இயக்கும் எண்ணம் தற்போது இல்லை என தெரிவித்தார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.

தற்போது அதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு அவதார்: பயர் அண்ட் ஆஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com