எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்- நடிகர் சத்யராஜ்

என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை, தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை என நடிகர் சத்யராஜ் கூறினார். #Sathyaraj #CauveryMangementBoard
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்- நடிகர் சத்யராஜ்
Published on

சென்னை

நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் நடிகைகள் அறவழியில் மவுன போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் இறுதியில் பேசிய சத்யராஜ், தமிழகத்தின் உரிமையை மறுக்காதீர்கள். மறுத்தால் போராட்டம் நடத்துவோம். ராணுவத்துக்கும் அஞ்சமாட்டோம் என சத்யராஜ் ஆக்ரோஷமாக பேசினார்.

சத்யராஜின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ராணுவத்துக்குத்தானே பயப்படமாட்டார்கள். ஆனால் ஐடி ரெய்டுக்கு பயப்பாடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்து நடிகர் சத்யராஜ் இன்று கூறியதாவது:-

தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை; என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்; போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி. ஒரு அப்பா வேடத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்து, ஒரு பெரிய தலைவர் பயப்பட வேண்டாம். மேலும் அவர் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், தமிழிசைக்கு பதிலளித்த சத்யராஜ், 40 வருடங்களாக சினிமாவில் நடித்துவரும் நான், நேர்மையாக வரி கட்டியுள்ளேன். அதனால், வருமான வரி சோதனைக்கு நான் பயப்படவில்லை. என்னிடம் அவ்வளவு சொத்துக்களும் இல்லை. தமிழர்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்து கொண்டேயிருப்பேன் என சத்யராஜ் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com