என் சொந்தங்களை தேடி திரும்பி வந்திருக்கிறேன் - நடிகர் சூரி

நடிகர் சூரி 'மாமன்' படத்தின் புரமோஷன் பணிக்காக கோவை சென்றுள்ளார்.
கோவை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியுள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூரி படக்குழுவுடன் 'மாமன்' படத்தின் புரமோஷன் பணிக்காக கோவை சென்றுள்ளார். அங்கு தியேட்டர் ஒன்றிற்கு சென்ற சூரி அங்கு வந்த ரசிகர்களுடன் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் சொந்தங்களை தேடி திரும்பி வந்திருக்கிறேன். கோவை மக்களே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. நாள்-1 ஒரு தொடக்கம்! "என்று பதிவிட்டுள்ளார்.






