நடிப்பில் அது எனது புதிய பரிமாணத்தை காட்டும் என்று நம்புகிறேன் - ஸ்ரீலீலா

சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க ஆசை என்று ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, அசுர வேக ஆட்டக்காரரும் ஆவார். சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் 'என்ட்ரி' கொடுத்தார். தற்போது தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை காதல் மற்றும் நகைச்சுவை படங்களில் நடித்து வந்த ஸ்ரீலீலா, நல்ல குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீலீலா கூறும்போது, "அழுத்தமான சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். நடிப்பில் அது எனது புதிய பரிமாணத்தை காட்டும் என்று நம்புகிறேன்.

அதேபோல வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும் நான் விரும்புகிறேன். அதுதான் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும் நம்புகிறேன்", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com