நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன்... 'கான் சிட்டி' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன்... 'கான் சிட்டி' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தேன்... 'கான் சிட்டி' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்
Published on

சென்னை,

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

இவரது நடிப்பில் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 26ந் தேதி ‘கான்சிட்டி’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏமாற்றாதே, ஏமாறாதே கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

'கான் சிட்டி' திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜ், 'கான் சிட்டி' திரைப்படத்தை பார்த்து, படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'அர்ஜுனின் வளர்ச்சியை காண மகிழ்ச்சியாக உள்ளது'

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, "இப்போதுதான் 'கான் சிட்டி' திரைப்படத்தை பார்த்தேன். 'கைதி' திரைப்படத்தில் இருந்த காலத்திலிருந்து தற்போது வரை அர்ஜுனின் வளர்ச்சியை காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அர்ஜுன் தாஸ் மட்டுமல்ல, நான் பார்த்தவரை அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் மனம் விட்டு சிரித்த அனுபவம் கிடைத்தது. குறிப்பாக வடிவுக்கரசி, யோகி பாபு, ஆனந்தம் ஆகியோரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது." என்று பாராட்டினார்.

'திரையரங்குகளில் கண்டு ஆதரவு அளியுங்கள்'

மேலும், "அனைவரும் இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். இது மகிழ்ச்சியைத் தரும் சிறந்த திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் கண்டு படக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள்." என்று தெரிவித்தார். இறுதியாக, 'கான் சிட்டி' திரைப்படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com