ஒவ்வொரு நாளும் நடிப்பைக் கற்றுக்கொள்கிறேன்... மனம் திறந்த அனிஷ்மா!

"சிறை, "யூத்" படங்களுக்குப் பிறகு "மொத ராத்திரி" பெரிய வரவேற்பைக் கொடுத்திருப்பதாக அனிஷ்மா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நடிப்பைக் கற்றுக்கொள்கிறேன்... மனம் திறந்த அனிஷ்மா!
Published on: 

சென்னை,

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனிஷ்மா. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான தமிழ் படங்களான 'சிறை', 'யூத்' மற்றும் 'மொத ராத்திரி' மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

நடிப்புக்கு பயிற்சி எடுக்க வில்லை

இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புல ஏதாவது புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன் என அனிஷ்மா கூறினார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நடிக்க வரும்போது வெறும் ஆசை மட்டும்தான் இருந்தது. வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அதனால நடிப்புக்கு பயிற்சி எதுவும் எடுத்துக்கல. ஸ்பாட்ல பார்த்து கற்றுக்கொண்டதுதான். கதை கேட்கும்போதே, அந்த கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொள்வேன். ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார், அவர் எப்படிச் சொல்றாரோ, அப்படித்தான் நடிக்கிறேன். இதுவும் ஒரு கற்றல் முறைதான். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புல ஏதாவது புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.

பெரிய வரவேற்பு கொடுத்த "மொத ராத்திரி"

கதை கேட்கும்போதே இது சரியான கதையா, இல்லையான்னு புரிஞ்சிரும். மனசுக்குள்ள ஒரு விசுவல் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியா பொருந்துவேனா, அதுல நடிக்க என்ன ஸ்கோப் இருக்குன்னு பார்ப்பேன். சில நேரம் இந்தக் கதையை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தோணும். அப்படி தோணுச்சுன்னா, உடனே ஓகே சொல்லிருவேன். சில படங்களைப் பார்க்கும்போது, இந்த கேரக்டர்ல நான் நடிச்சிருக்கணும்னு தோணும்.

"சிறை, "யூத்" படங்களுக்குப் பிறகு "மொத ராத்திரி" எனக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல கதைகள்ல நடிக்கணும்”

இவ்வாறு அவர கூறினார்.

X