“ஜூவாலாவை எனக்கு பிடிக்கும்” -நடிகர் விஷ்ணு விஷால்

எனக்கு ஜூவாலாவை பிடிக்கும் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
“ஜூவாலாவை எனக்கு பிடிக்கும்” -நடிகர் விஷ்ணு விஷால்
Published on

நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகள் காதலித்து மணந்த மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். விஷ்ணு விஷாலும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் ரகசியமாக சந்திப்பதாகவும், நெருங்கி பழகுவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

இந்த நிலையில் ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக செல்பி எடுத்து அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டார். படத்தின் கீழ் எந்த கருத்தையும் பதிவிடவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் காதலிக்கிறீர்களா? இவருக்காகத்தான் மனைவியை பிரிந்தீர்களா? விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வலைத்தளத்தில் பேசினர்.

செல்பி குறித்து விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு ஜூவாலாவை ஓராண்டு காலமாக தெரியும். எனக்கு ஜூவாலாவை பிடிக்கும். அதுபோல் ஜூவாலாவுக்கும் என்னை பிடிக்கும். எங்களுக்கு பொதுவான நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுகிறோம்.

எங்கள் தொடர்பு இதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம் என்றார்.

காதலை அவர் மறுக்கவில்லை என்பதால் காதலிப்பது உண்மைதான் என்று பேச்சு கிளம்பி இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com