

கொரோனாவால் வந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் பலவிதமாக உபயோகப்படுத்துகிறார்கள். கங்கனா ரணாவத் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு இருக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படப்பிடிப்பில் சில மாதங்களாக கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்து வந்தார். இதில் ஜெயலலிதா தோற்றத்துக்கு மாறுவதற்காக இயக்குனர் சொன்னதாலும் கதாபாத்திரம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் 20 கிலோ உடல் எடையை கூட்டி இருந்தார்.