''இந்திய சினிமாவை மிகவும் மிஸ் செய்தேன்'' - பிரியங்கா சோப்ரா


“I miss Hindi movies and I miss India so much’’- Priyanka Chopra
x
தினத்தந்தி 4 July 2025 3:15 PM IST (Updated: 4 July 2025 3:16 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு பிரியங்கா சோப்ரா மீண்டும் திரும்பி இருக்கிறார்.

சென்னை,

இந்திய-ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ராஜமவுலியின் அதிரடி சாகச திரில்லர் படமான எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

பிரியங்கா, கடைசியாக 2020-ம் ஆண்டு வெளியான ''தி ஸ்கை இஸ் பிங்க்'' என்ற இந்திய படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்திய சினிமாவை மிகவும் மிஸ் செய்ததாக கூறினார்.

அவர் கூறுகையில், "நான் இந்தி படங்களை மிஸ் செய்கிறேன், இந்தியாவை மிகவும் மிஸ் செய்கிறேன். இந்த ஆண்டு ஒரு இந்திய படத்தில் நடிக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு எப்போதும் நிறைய அன்பு கிடைத்துள்ளது, அது தொடரும் என்று நம்புகிறேன்," என்றார்.

மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story