''ஒரு ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்''...கண் கலங்கிய மமிதா பைஜு

தற்போது பிரதீப் ரங்கநாதன், சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் படங்களில் மமிதா பைஜு நடித்து வருகிறார்.
சென்னை,
''பிரேமலு'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதன், சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு நட்சத்திர ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக அவர் கூறினார். அவர் கூறுகையில், ''நான் இவ்வளவு பிரபலமாகாதபோது, சூர்யா சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த வாய்ப்பு தவறிப்போனது. அப்போது நான் மிகவும் அழுதேன். ஆனால் இப்போது சூர்யா சாருடன் ஒரு படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.
பாலா இயக்கிய ''வணங்கான்'' படத்தில் சூர்யாவும் மமிதா பைஜுவும் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால், சூர்யாவும் மமிதா பைஜுவும் படத்திலிருந்து விலகினர். பின்னர் பாலா, அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து அந்த படத்தை முடித்தார்.
தற்போது, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார். இதில், மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.






