"விஜய் மல்லையாவால் குடியை விட்டேன்" - பிரபல இயக்குனர்


I quit drinking because of Vijay Mallya - Director Raju Murugan
x

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் நடித்துள்ள ''குட் டே'' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை,

விஜய் மல்லையாவின் 4 மணி நேர போட்காஸ்டை பார்த்து மதுப்பழக்கத்தை கை விட்டதாக இயக்குனர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் நடித்துள்ள ''குட் டே'' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் ராஜு முருகன், தான் குடிவை விட்டு பத்து வருடங்கள் ஆவதாகவும், அதற்கு விஜய் மல்லையாவின் 4 மணி நேர போட்காஸ்டை பார்த்ததுதான் காரணம் என்றும் கூறினார். 2009ம் ஆண்டு பிரபாகரன் மறைவு செய்தியை அறிந்து தான், அதிகம் குடித்ததாகவும் கூறினார்.

இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ''குட் டே''. இந்த படத்தினை பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்துள்ளார். படத்திற்கான திரைக்கதையை பூர்ணா எழுதியுள்ளார். இதில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1 More update

Next Story