சவாலான கேரக்டர்களில் நடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்- ரிமா கல்லிங்கல்

நடிகை ரிமா கல்லிங்கல் நடித்துள்ள 'தி மித் ஆப் ரியாலிட்டி' என்ற படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
கொச்சி,
மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரிமா கல்லிங்கல். இவரது நடிப்பில் 'தி மித் ஆப் ரியாலிட்டி' என்ற படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தில் நடிகை ரிமா தென்னை மரத்தில் ஏறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி ரீமாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரோல்கள் எழுந்து வருகிறது.
இது குறித்து ரிமா கல்லிங்கல் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "படத்தில் தீவில் எல்லா வேலைகளையும் நானே செய்து தனியாக வசிக்கிற பொண்ணு கேரக்டர். படத்திற்காக தென்னை மரம் ஏறக் கற்றுக் கொண்டேன். அங்கு சிக்ஸ் பேக் உள்ள ஒரு பையன் எனக்கு தென்னை மரம் ஏறக் கற்றுக் கொடுத்தான். பல நாட்கள் பயிற்சிக்கு பிறகு நான் மரம் ஏற கற்றுக் கொண்டேன். தென்னை மரம் ஏறுவது ஜாலியாக இருந்தது. படத்தில் சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். விமானத்தில் இருந்து குதித்திருக்கிறேன். பாம்பை கழுத்தில் போட்டு நடித்தேன். இது போன்ற சவாலான கேரக்டர்களில் நடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.






