“நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்

நயன்தாராவை போராளியாக பார்ப்பதாக நடிகை கத்ரினா கைப் தெரிவித்துள்ளார்.
“நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்
Published on

நடிகை நயன்தாரா 15 ஆண்டுகளாக தமிழ் பட உலகில் நம்பர்1 இடத்தில் இருக்கிறார். எத்தனையோ புதிய கதாநாயகிகள் வந்தும் அவரை அசைக்க முடியவில்லை. 2 காதல் தோல்விகள், மூன்றாவது முறை இன்னொருவருடன் காதல் என்று சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியாமல் இருப்பதை பார்த்து சக நடிகைகள் ஆச்சரியப்படுகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவை போராளி என்று பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் பாராட்டி உள்ளார். கத்ரினா அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனம் நடத்துகிறார். இந்த நிறுவனத்துக்கான விளம்பர படத்தில் நயன்தாராவை அழைத்து வந்து நடிக்க வைத்தார். இதில் நடித்ததற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்து இருந்தார். நயன்தாராவுடன் பழகிய அனுபவம் பற்றி கத்ரினா கைப் தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

நயன்தாரா விளம்பர படத்தில் நடித்தபோது பல விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தினார். மிகவும் அற்புதமானவராக அவரை பார்த்தேன். அதுமட்டுமன்றி ஒரு போராளியாகவும் எனக்கு தெரிந்தார். இளம் வயதில் இருந்தே சினிமா துறையில் இருக்கிறார். கடுமையான உழைப்பாளி. நயன்தாராவின் குணத்தோடு எனது குணங்களும் ஒத்துப்போகிறது. படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டபோது எனது குழுவினரிடம் நயன்தாராவை பார்க்கும்போது என்னை கண்ணாடியில் பார்ப்பதுபோல் உள்ளது என்று சொன்னேன். என்று கத்ரினா கைப் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com