'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்' - நடிகை நளினி

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நளினி, நிகழ்ச்சியொன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்' - நடிகை நளினி
Published on

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நளினி நடிகரும், டைரக்டருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நளினி, நிகழ்ச்சியொன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

நளினி கூறும்போது, "நான் பிசியான நடிகையாக இருந்த காலத்தில் வருடத்துக்கு 24 படங்களில் நடித்தேன். சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ள நினைத்தேன்.

அப்போதுதான் ராமராஜனை காதலித்தேன். நானும், சுரேசும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது ராமராஜனுடன் நான் ஓடிப்போக முடிவெடுத்தேன். அதை சுரேஷிடம் சொன்னேன். அவர் பதறிவிட்டார். ஓடிப்போக வேண்டாம், உன் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது? என்று டென்ஷன் ஆனார். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனாலேயே ராமராஜன் படங்களில் நடிக்க அனுமதிக்காமல் இருந்தனர். அந்த சமயம் நிழல்கள் ரவியுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எங்கள் காதலுக்கு நிழல்கள் ரவிதான் தூது போனார். இதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

ராமராஜன் ஒரு நல்ல நடிகர். பாவம், தெரியாமல் என்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவர் மிகவும் தங்கமானவர்தான். ஆனால் ஏனோ எங்கள் இருவர் இடையே 'மேட்ச்' ஆகவில்லை. பிரிந்து விட்டோம். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்'' என்றார்.

'மனசுக்கேத்த மகராசா', 'காவலன்' ஆகிய படங்களில் ராமராஜன்-நளினி ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com