'ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைத்தேன்' - நடிகர் உதயா

நடிகர் உதயா இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் 'அக்யூஸ்ட்' படத்தில் நடித்துள்ளார்.
'ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைத்தேன்' - நடிகர் உதயா
Published on

சென்னை,

தமிழில் பல படங்கள் நடித்துள்ள உதயா, பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஆவார். இவரது சகோதரர் ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

இதற்கிடையில் உதயா 'அக்யூஸ்ட்' என்ற படத்தை கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் உதயாவுடன் முதன்முறையாக அஜ்மல், யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடந்த இப்படத்தின் விழாவில் உதயா பங்கேற்று பேசும்போது, ''சினிமாவில் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது என் பாக்கியம். எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார் என்று நம்புகிறேன்.

நான் நிறைய சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறேன். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாகவே இந்த இடத்தில் நிற்கிறேன். நம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்'', என்றார்.

ஏ.எல்.அழகப்பன் பேசும்போது, ''எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். அதுதான் அவர்களை தனிப்பட்டு செயல்பட வைத்திருக்கிறது'', என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com