“நானும் ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.." - அண்ணாமலை


“நானும் ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.. - அண்ணாமலை
x

நல்ல திரைப்படம் நல்ல நடிகர்கள் நடிக்கும் போது , நமக்கும் ஆவல் இருக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது;

"ஜனநாயகன் படத்த பார்க்க நானும் ஆவலுடன் காத்து இருந்தேன். நல்ல திரைப்படம் நல்ல நடிகர்கள் நடிக்கும் போது , நமக்கும் ஆவல் இருக்கும். திரைப்படம் என்பது நடிகர் மட்டும் உருவாக்கும் விஷயம் கிடையது. லட்சக்கணக்கானவர்கள் பின்னாடி இருக்கிறார்கள். எல்லாரும் சேர்ந்துதான் பண்ணுறாங்க.. ஜனநாயகத்தை பொறுத்தவரை சென்சார் ஏதோ சொல்கிறார்கள்.

மறு தணிக்கை என எங்கெங்கோ பொய்க்கொண்டு இருக்கிறது. அதனால், நானும் உங்களை போல சாதாரண மனிதனகாத்தான் சிபிஎப்சி, ஜனநாயகன் படக்குழுவை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்தியாவில் எப்போதுமே நீதிமன்றம் இருக்கிறது. மேல் முறையீட்டுக்கு வழி இருக்கிறது. எல்லா திரைப்படமும் கடந்து வரும் பாதைதான் இது" என்றார்.

1 More update

Next Story