

சென்னை,
கதாநாயகனாக தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார் சமீபத்தில், அப்படத்தில் பணியாற்றிய தனது அனுபவம் குறித்தும் நாயகன் விஜய் சேதுபதி குறித்தும் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது:-
சில படங்கள். அவற்றை உருவாக்கும்போதே தங்களுக்குள் ஒரு சிறிய உலகமாக மாறிவிடுகின்றன. இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை நான் நம்பமுடியாத அளவிற்கு அதிர்ஷ்டமாக உணர்கிறேன். படங்களைப் போலவே உடன் பணியாற்றுபவர்களும் முக்கியமானவர்கள் என்பதை அந்த அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
விஜய்சேதுபதி மிகவும் அக்கறையும் தாராள குணமும் கொண்ட சக நடிகராக இருந்தார். அதற்கு நன்றி. விஜய் சேதுபதியுடன் இந்தப் பயணத்தில் பயணித்த பிறகு, வேறு யாருடனும் இந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எவ்வளவு காலம் எடுத்தாலும் அல்லது எவ்வளவு கடினமாக இருந்தாலும், விஜய்சேதுபதி மிகவும் ஊக்கமளிப்பவராகவும், இளிமையானவராகவும் இருந்து, நான் ஆராய்ந்து அதைச் சரியாகச் செய்வதற்கு எப்போதும் ஒரு வசதியான சூழலை உருவாக்கிக் கொடுத்தார்.
இதற்கு முன்பு இருவரும். பேட்ட' மற்றும் 'மாஸ்டர் படங்களில் நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் ஒருபோதும் இணைந்து நடித்ததில்லை அதனால், இந்தப் படம் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஒன்று. மேலும், இது எவ்வளவு அழகான ஒன்றாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.