

சென்னை,
பிரபல நடிகை சமந்தா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். தற்போது சமந்தா 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் இது ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'நீங்கள் வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்' என்றும் 'நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்' என்றும் பதிவிட்டு இருக்கிறார். அவர் யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், சிலர் விராட் கோலிக்காகவும் ஆர்.சி.பி அணிக்காகவும் போட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகை சமந்தா, விராட் கோலியை புகழ்ந்து பேசியிருந்தார். கடந்த வருடம் நடந்த ஒரு பேட்டியில் சமந்தா இவ்வாறு பேசினார். அவர் பேசியதாவது, 'கோலி மிகவும் ஊக்கமளிப்பவர். அவர் விளையாட்டில் செலுத்தும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஒத்துழைப்பு மிகவும் அற்புதமாக இருக்கும்', இவ்வாறு கூறினார்.
View this post on Instagram