’நான் ஒரு நடிகையாக அறியப்பட விரும்புகிறேன், கவர்ச்சிக்காக அல்ல’ - அக்சரா

தனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும் என்று அக்சரா கூறினார்.
சென்னை,
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமானவர் அக்சரா ரெட்டி. சமீபத்தில் வெளியான ‘ரைட்’ படத்தின் மூலம் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில், அவர் சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
’என் அம்மா இறந்த பிறகு, சினிமாதான் எனக்குப் பிடிச்ச ஒரே துறைன்னு முடிவு பண்ணிட்டேன். காலேஜ் முடிச்சதும் ஜார்ஜியா போய் சைக்காலஜி படிச்சேன். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்’.
ரைட் படம் மூலமாதான் நான் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானேன். பில் கேட்ஸ் என்ற கன்னடப் படத்தில் நான் ஏற்கனவே ஹீரோயினாக நடிச்சிருந்தேன். நான் கவர்ச்சிக்காக இல்லாமல் ஒரு நடிகையாக அறியப்பட விரும்புகிறேன்' என்றார்.
Related Tags :
Next Story






