'இனி நான் 'வேட்டைக்காரி' சஞ்சனா' - நடிகை சஞ்சனா சிங்

'வேட்டைக்காரி' படத்தில் கதாநாயகியாக சஞ்சனா சிங் நடித்துள்ளார்.
I want to call myself
image courtscy:instagram@actresssanjana
Published on

சென்னை,

காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் புதுமுக நடிகர் ராகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வேட்டைக்காரி'. இதில், கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்சன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா ,வேலுச்சாமி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சஞ்சனா சிங் பேசுகையில்,

"கவிஞர் வைரமுத்து, வேட்டைக்காரி என்ற சிறப்பான தலைப்பை எனக்கு கொடுத்திருக்கிறார். நான் 15 வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கிறேன், ஆனால் எனக்கு சரியாக தமிழ் பேச வராது. இருந்தாலும் நான் அனைத்து இடங்களிலும் தமிழில் தான்பேசுவேன்.

தமிழ் என் உயிர். இனி என்னை 'வேட்டைக்காரி' சஞ்சனா என்று மக்கள் அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். காரணம், நான் முதல் முறையாக ஆக்சன் ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ஒரு அழகான கிராமத்து பின்னணியில் நடித்த படம் இதுதான். அனைவரும் படம் எடுப்பார்கள். கேரவன் உள்ளிட்ட எந்தவித வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என் என்று நம்புகிறேன், நன்றி. இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com