’அதுதான் எனது கனவு கதாபாத்திரம்’ - ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தனது 18 வயதில் 'கில்லி' என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காகும்
அதனைத்தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த அவர், தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.
தமிழில் இவர் "தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான்" உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் ஒரு நேர்காணலில் தனது கனவு கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அதன்படி, 'பாகுபலி' போன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதுதான் தனது கனவு கதாபாத்திரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story






