அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் - அனஸ்வரா ராஜன்

சவால்களை சந்திப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் - அனஸ்வரா ராஜன்
Published on

மலையாள சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பேசப்பட்ட நடிகை அனஸ்வரா ராஜன். தமிழில் 'ராங்கி', 'தக்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக 'வித் லவ்' படத்தில் நடித்து பேசப்பட்டார். இதற்கிடையில் சவால்களை சந்திப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது. "ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க எனக்கு பிடிக்காது. எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்தார்? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு சவால்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com