நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் - கே.எஸ்.ஐஸ்வர்யா


நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் - கே.எஸ்.ஐஸ்வர்யா
x

கோப்புப்படம் 

நான் சிறுவயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை என்று கே.எஸ்.ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

கபடி வீராங்கனையான கே.எஸ்.ஐஸ்வர்யா, தமிழ்நாட்டிற்காக பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியவர். கொரோனா காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது ‘சதுரங்கவேட்டை' நட்ராஜ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கே.எஸ்.ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில், “நான் சிறுவயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை. அவர் கடின உழைப்பால் எட்டிய உயரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். நான் நடிக்க வந்தபோது, ‘ஆரம்ப கால நயன்தாரா போல இருக்கிறீர்கள்' என்று பலரும் சொன்னது மகிழ்ச்சி அளித்தது. நயன்தாராவைப் போலவே, உழைப்பால் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆசை.

புதுப்புது கதைகளங்களிலும், வித்தியாசமாக படைப்புகளைத் தரும் இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story