அம்மாவாக வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன்- நடிகை ரக்‌ஷனா


அம்மாவாக வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன்- நடிகை ரக்‌ஷனா
x

விதார்த், ரக்‌ஷனா இணைந்து நடித்துள்ள மருதம் படம் வருகிற 10-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.

சென்னை,

வி.கஜேந்திரன் இயக்கத்தில் சி.வெங்கடேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் மருதம். விவசாயிகளின் வாழ்வியலையும் விவசாய நிலத்தின் அவசியத்தையும் அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி உள்ள இந்த படத்தில் விதார்த், ரக்‌ஷனா, அருள்தாஸ் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். வருகிற 10-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகை ரக்‌ஷனா பேசியதாவது:- மருதம் என் 2-வது படம், படத்தில் பெரிய ஹீரோ கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை, அமேசிங்கான ஆக்டர் விதார்த். அவருடன் நடித்தது ஒரு இனிய அனுபவம். ஒரு சின்ன கிராமத்தை மிக அழகாகக் காட்டியுள்ளனர். மிகுந்த வெயிலில் படம் எடுத்தோம். குழந்தைக்கு எப்படி அம்மாவாக நடித்தீர்கள் எனக்கேட்கிறார்கள். இது ஒரு ஸ்ட்ரீயோடைப் அதை உடைக்க வேண்டும் என நினைத்தேன், அம்மாவின் உலகத்தை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன் அது இந்தப்படத்தில் நிறைவேறியது. மருதம் மிக அற்புதமாக வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story