'லைலா' படத்தில் நடிக்க அதுதான் காரணம் - விஷ்வக் சென்

’லைலா’ படம் இன்று வெளியாகி உள்ளது.
I wanted to fill the void: Vishwaksen
Published on

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவர் விஷ்வக் சென். தற்போது இவர் 'லைலா' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அகன்ஷா ஷர்மா நடித்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேர்போன விஷ்வக் சென் இப்படத்தில் ஆண், பெண் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ராம் நாராயண் இயக்க ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரித்த இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், லைலா படத்தில் நடிக்க காரணம் என்ன என்பதை விஷ்வக் சென் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'நான் இதுவரை படத்தில் பெண் வேடத்தில் நடித்ததில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆவலுடன் இருந்தேன். அப்போதுதான் 'லைலா' என்னிடம் வந்தது. இதனால்தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com