ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலக நினைத்து இருந்தேன்; மனம் திறக்கும் அமலா பால்

நடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலக நினைத்து இருந்தேன்; மனம் திறக்கும் அமலா பால்
Published on

சென்னை,

இயக்குநர் ரத்னகுமார் நிர்வாண காட்சியில் நடிக்க சிறப்பு ஆடை அணிவது குறித்து விவாதித்ததாகவும் , நான் அதைப் பற்றி கவலை வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார். இருப்பினும், படப்பிடிப்பின் போது தான் மிகவும் பதட்டமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகவும், செட்டில் என்ன நடக்கும், எத்தனை பேர் இருப்பார்கள், பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் என்றும் அவர் கூறினார்.

காட்சி எடுப்பதாக இருந்த இடம் கிட்டத்தட்ட மூடப்பட்டு இருந்தது. செட்டில் 15 பேர் மட்டுமே இருந்தனர். படக்குழுவினரை நம்பவில்லையென்றால் நான் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது என்று அமலா பால் கூறினார். ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலகப்போகிறேன் என்று என்னுடைய மேனேஜரிடம் தெரிவித்திருந்தேன். ஏனென்றால் திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறும் கதைகள் அனைத்தும் மிகவும் பொய்யானதாக இருக்கிறது.

ஆமாம், கதாநாயகியை மையமாக வைத்து படமெடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் போராடி வாழ்வது போலவும் அல்லது பழிவாங்குகிற பெண்ணாகவும், கணவனை முற்றும் முழுதாக ஆதரிக்கும் பெண்ணாகவும் அல்லது தியாகம் செய்யும் மனைவி, தாய் கதாபாத்திரமுள்ள கதையை மட்டுமே சொல்கிறார்கள். இந்த பொய்களின் நீட்சியில் எந்த ஆர்வமும் இல்லை என்று கூறினார்.

ஆடை படத்தின் 'நிர்வாண காட்சி' கடந்த மாதம் வைரலாகியது. அமலா பால் தைரியமான, அழகான, கெட்டவள் என்று கரண் ஜோஹர் வர்ணித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com