நான் நேர்மையாகவே இருந்தேன்... விவாகரத்து குறித்து சமந்தா பரபரப்பு தகவல்

நான் நேர்மையாகவே இருந்தேன்... விவாகரத்து குறித்து சமந்தா பரபரப்பு தகவல்
Published on

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து மணந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். இந்த நிலையில் தான் நடித்துள்ள சாகுந்தலம் பட விழா நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்து பரபரப்பான தகவலை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, "நான் விவாகரத்து செய்ததும் சில நாட்களிலேயே எனக்கு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. உடனே சம்மதித்தேன். அந்தப் பாடலில் ஆட ஒப்புக்கொண்டதும் குடும்பத்தினர் தெரிந்தவர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொள். போதும். இப்போதுதான் விவாகரத்து செய்து இருக்கிறாய். உடனே நீ குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுவது நன்றாக இருக்காது என்று ஆலோசனை வழங்கினார்கள்.

என்னை எப்போதும் ஊக்குவிக்கும் சினேகிதர்கள் கூட அந்தப் பாடலை செய்ய வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் திருமண பந்தத்தில் நான் நூறு சதவீதம் நேர்மையாக இருந்தேன். ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏதோ தவறு செய்தவள்போல எதற்காக ஒளிந்து கொள்ள வேண்டும்.

நான் செய்யாத குற்றத்திற்கு என்னை நானே இம்சித்துக் கொண்டு எதற்காக வருத்தப்பட வேண்டும். ஏற்கனவே எத்தனையோ வேதனைகளை அனுபவித்து விட்டேன்'' என்றார். சமந்தா பேச்சு பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com