‘டோரதி’ படத்தில் மூழ்கிப்போனேன்! - சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு

அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் இது என பதிவிட்டுள்ளார்.
‘டோரதி’ படத்தில் மூழ்கிப்போனேன்! - சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு
Published on: 

சென்னை,

டோரதி கதாபாத்திரம் மிகுந்த உணர்வுபூர்வமானது. இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் வாழும் உலகத்திற்குள் நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் இது. என தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

‘டோரதி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள 'டோரதி', சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.

திரைப்பிரபலங்களின் பாராட்டு

வெளியானது முதலே 'டோரதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து , ராஜு முருகன் உள்ளிட்டோரும் 'டோரதி' படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் பாராட்டு

அந்த வகையில், டோரதி படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, டோரதி கதாபாத்திரம் மிகுந்த உணர்வுபூர்வமானது. இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் வாழும் உலகத்திற்குள் நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை அழகாக நினைவூட்டும் படம் இது. ஒரு தயாரிப்பாளராக, 'கோவா' மற்றும் 'லவ்' போன்ற படைப்புகள் மூலம் LGBTQ+ சமூகத்தைச் சார்ந்த கதைகளை நான் கையாண்டுள்ளேன். இச்சமூகத்தை மதிப்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்; அவர்களுக்கு என்றும் உறுதுணையாக நிற்பேன். இப்படத்தை உருவாக்கியதற்கு என் நண்பர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.

சானந்த், உங்கள் நடிப்பு மிகச் சிறப்பாக, அபாரமாக இருந்தது. ரிஷிகாந்த் உங்களுக்குப் பலப்பல வாழ்த்துகள்... இந்த ஆண்டு உங்களுக்கு அமைந்த விதம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com