''அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்'' - மாளவிகா மனோஜ்


I was lucky to play that role - Malavika Manoj
x

மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''ஜோ'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.

சுஹாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ''ஓ பாமா அய்யோ ராமா'' படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 11-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனில் பேசிய மாளவிகா மனோஜ், இப்படத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறினார். அவர் கூறுகையில்,

"பெரும்பாலான படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்காது. ஆனால் இப்படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்னுடைய முதல் தெலுங்கு படத்திலேயே இந்த மாதிரி ஒரு காதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்" என்றார்.

1 More update

Next Story