இரண்டாவது திருமண வதந்திகளால் வேதனையடைந்தேன் - மீனா


I was pained by second marriage rumors: Meena
x
தினத்தந்தி 16 Sept 2025 9:44 AM IST (Updated: 16 Sept 2025 9:50 AM IST)
t-max-icont-min-icon

மீனா தனது கணவர் வித்யா சாகரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

மீனா தனது கணவர் வித்யா சாகரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்தார். வித்யா சாகர் 2022-ல் நுரையீரல் தொற்று காரணமாக 48 வயதில் காலமானார்.

இதனையடுத்து, தனது மகளுடன் மீனா வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், மீனா இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு ஆளானார்.

இந்நிலையில், நடிகர் ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயாமு ரா என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட மீனா, இந்த வதந்திகளால் ஏற்பட்ட துயரத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

மற்ற நடிகர்களுடன், குறிப்பாக அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு, தன்னை பற்றி பரவும் செய்திகள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்ததாக அவர் கூறினார்.

1 More update

Next Story